தீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி

இரண்டு கார்களுடன் மோதிய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் புதன்கிழமை (மார்ச் 20) அதிகாலையில் உயிரிழந்தார்.

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல் அதிகாலை 2.40 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.அந்த 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சம்பவத்தை போலிஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.