சிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது 'நியூஸ்வீக்' சஞ்சிகை

சிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது 'நியூஸ்வீக்' சஞ்சிகை

1 mins read
003a7317-9327-43ca-93a2-4ce23b113f7e
-

சிங்கப்பூர் பொது மருத்துவமனையை, உலகின் மூன்றாவது ஆகச் சிறந்த மருத்துவமனையாக 'நியூஸ்வீக்' சஞ்சிகை அறிவித்துள்ளது. 'மாயோ கிளீனிக்', 'க்லீவ்லாந்து கிளீனிக்' ஆகிய மருத்துவமனைகளுக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை இடம்பெற்றுள்ளது.

தலைசிறந்த பத்து மருத்துவமனைகளைக் குறிப்பிடும் பட்டியலை நியூஸ்வீக் வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள இரண்டு மருத்துவமனைகள் ஆசியாவைச் சேர்ந்தவை. தோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறது.