கார், லாரி விபத்து: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர்

கார்ப்பரேஷன் சாலையில் காரும் லாரியும் மோதிக்கொண்டதில் இருவர்  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று முன்தினம் காலை நிகழ்ந்தது. 
விபத்தைக் காட்டும் காணொளி ஸ்டோம்ப் இணையப்பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது. காரின் முன் பகுதி மோசமாக சேதமடைந்தது. காருடன் மோதியதில் லாரி சாலைத் தடுப்பு மீது ஏறியது.
கார்பரேஷன் சாலைக்கும் ஜாலான் அகமது இப்ராஹிமுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 7.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநரான 33 வயது ஆடவரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த 23 வயது ஆடவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.