சுடச் சுடச் செய்திகள்

ரயிலிலிருந்து கிளம்பிய வெண்புகை: குளிர்சாதன வாயுக் கசிவு என தகவல்

போனா விஸ்டா எம்ஆர்டி நிலையத்தில் இருந்த ரயிலிலிருந்து கிளம்பிய வெண்புகை, ரயிலில் உள்ள குளிர்சாதன வாயுக் கசிவினால் ஏற்பட்டது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 7.45 மணி அளவில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் பாசிர் ரிஸ் நிலையத்தை நோக்கி ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதிலிருந்து வெண்புகை வெளியேறியதாக எஸ்எம்ஆர்டி அதன் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.
இதையடுத்து பாதுகாப்பு நிமித்தமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அனைவரும் எம்ஆர்டி நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. இறக்கிவிடப்பட்ட பயணிகள் பிறகு இன்னொரு ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
“ரயிலைச் சோதனை செய்வதற்காக அது உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட்டது,” என்று எஸ்எம்ஆர்டி கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon