கழிவறையில் இருந்த பெண்களைப் படமெடுத்தவருக்கு சிறை

கழிவறையைப் பயன்படுத்திய பெண்களைக் காணொளி எடுத்த குற்றத்துக்காக ஆடவர் ஒருவ ருக்குச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. 
27 வயது கிளேரன்ஸ் டாங் ஜியா மிங்குக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மின்னிலக்க விளம்பர நிபுணரான டாங்,  சேமிபோய் இணையத்தளத்துடன் தொடர்புடையவர். ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்தில் உள்ள உணவகத்துக்குச் சென்ற டாங், அங்கு இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் கழிவறை ஒன்றில் கேமராவை மறைவாகப் பொருத்தினார். பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் பார்ப்பதற்கு 25 வயதுக்கும் அதிகமாக தெரியும்  பெண்களைக் கொண்ட காட்சி களை அவர் பிறகு நீக்கினார். 
பெண்களின் மானத்துக்குப் பங்கம் விளைவித்த குற்றத்தை டாங் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.  விநியோகம் செய்யும் நோக்குடன் 2,103 ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். $15,000 பிணையில் டாங் விடுவிக்கப் பட்டுள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று அவர் அரச நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தவிடப்பட்டுள்ளது. இவருக்கு முன்னதாக மேலும் நான்கு பேர் இத்தகைய குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப் பட்டது. இவர்களும் சேமிபோய் இணையத்தளத்துடன் தொடர்புடையவர்கள்.