சிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்

ரோச்சோர் கெனால் ரோட்டில் இருக்கும் மின்னணுப் பொருட்கள் விற்பனை மையமான சிம் லிம் ஸ்கொயர்  (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) கட்டடத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்களில் 80%க்கும் அதிகமானோர் மொத்த விற்பனைக்கு இணங்கியுள்ளனர். 
அப்படியே அந்தக் கட்டடத்தை விற்க முன்பு $1.1 பில்லியன் தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டது. 
அந்த விலை, பிப்ரவரி 1 முதல் $1.3 பில்லியனாகக் கூட்டப்பட்டு உள்ளது. அடுத்த மாத முடிவில் அந்த இடத்தை ஏலக்குத்தகையில் விற்பனைக்கு விடுவது இலக்கு என்று எஸ்எல்பி ஸ்காட்டியா என்ற நிறுவனம் தெரிவித்தது. 
சிம் லிம் ஸ்குவேர் கட்டடத்தின் தொடக்கவிலை $1.3 பில்லியனாக உயர்த்தப்பட்டதற்கான காரணம் பற்றி குறிப்பிட்ட அந்தக் கட்டடத்தின் ஒட்டுமொத்த விற்பனைக் குழு தலைவர் விகாஸ் குப்தா, சென்ற ஆண்டைவிட இப்போது சந்தை சிறப்பாக இருப்பதும் சிம் லிம் ஸ்கொயர் அமைவிடமும் காரணம் என்றார்.