ஆசியான் உணவுத்துறை கூட்டமைப்பு உதயம்

ஆசியானில் உள்ள உணவகச் சங்கங்கள், தங்கள் யோசனை களையும் புத்தாக்கங்களையும் பகிர்ந்துகொள்ள இணங்கி இருக்கின்றன. 
இந்த இணக்கத்தை வெளிப் படுத்தும் வகையில், நேற்று சிங் கப்பூர், கம்போடியா, இந்தோனீ சியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உணவகச் சங்கங்கள் புரிந்துணர்வு குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன. 
இதன் மூலம் ஆசியான் உணவகச் சங்கக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. சிங்கப்பூரிலும் இதர நாடுகளிலும் செயல்படும் உணவு, பானத் துறைகள் ஆசி யான் சந்தையில் ஈடுபட இந்தக் குறிப்பு உதவும். 
சமையலில் பயன்படக்கூடிய புதுப்புது சமையல் குறிப்புகளையும் முறைகளையும் தலைசிறந்த இதர நடைமுறைகளையும் பல நாட்டு அமைப்புகளும் பகிர்ந்து கொள்ள இது வகை செய்யும்.