அரசாங்க ஊழியர்களின் மின்னஞ்சல் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை

பல அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் களுக்குச் சொந்தமான மின்னஞ் சல் ரகசிய தகவல்களையும் சிங் கப்பூரில் உள்ள வங்கிகளைச் சேர்ந்த 19,000க்கும் அதிக பணப் பட்டுவாடா அட்டை விவரங்களை யும் திருடி அவற்றை மோசடிப் பேர் வழிகள் இணையத்தில் விற் பனைக்கு விட்டு இருக்கிறார்கள். 
அத்தகைய பல அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த மின்னஞ் சல் ரகசிய தகவல்கள் கடந்த இரு ஆண்டுகளில் ரகசிய  இணையத் தளத்தில் காணப்பட் டதைத் தான் கண்டுபிடித்து இருப்பதாக குருப்-ஐபி (Group-IB) என்ற ரஷ்ய இணையப் பாதுகாப்பு நிறுவனம் இம்மாதம் 19ஆம் தேதி தெரிவித்தது.
$600,000க்கும் அதிகமான வங்கி பணப்பட்டுவாடா அட்டைத் தகவல்களும் சென்ற ஆண்டு காணப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. 
அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech), கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகி யவை இந்த விவகாரத்தில் உள் ளடங்கும் என்று செய்தி அறிக்கை யில் அந்த ரஷ்ய நிறுவனம் குறிப் பிட்டு இருக்கிறது.