ஆசியா மேம்பட சிங்கப்பூரும்  அமெரிக்காவும் ஒத்துழைக்கும்

சிங்கப்பூரும் அமெரிக்காவும் புதன் கிழமை புதிய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, அந்த இரு நாடுகளும் ஆசியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதிலும் முதலீட்டைப் பெருக்குவதிலும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட இருக்கின்றன. 
இதன் மூலம் ஆசிய நாடு களுக்கு உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற்கு அதிக நிதி வளத்தைப் பெற வாய்ப்புகள் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
ஆசியான் நாடுகள் தங்கள் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கு அதிக அளவில் மேலும் தனியார் முதலீடுகளை எதிர்நோக்கி இருக்கின்றன. 
தென்கிழக்கு ஆசிய நாடு களுக்கு அடுத்த 10 ஆண்டில் அவற்றின் உள்கட்டமைப்பு வசதி களைப் பெருக்குவதற்காக ஆண் டுக்கு US$210 பில்லியன் (S$284 பில்லியன்) தேவைப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டு உள்ளது.  
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் வா‌ஷிங்டனுக்கு அறிமுகப் பயணம் மேற்கொண் டிருந்தபோது இந்தப் புரிந்துணர்வு குறிப்பு கையெழுத்தானது.
ஆசியாவில் அடிப்படை வசதி களை மேம்படுத்துவதில் ஈடுபாடு கொள்ளும்படி நிறுவனங்களுக்கு சிங்கப்பூரும் அமெரிக்காவும் சேர்ந்து ஊக்கமூட்ட இந்த உடன் பாடு வகைசெய்கிறது. சிங்கப்பூரின் ‘இன்ஃப்ராஸ்டிரக்சர் ஆசியா’ என்ற அமைப்பு, முதலீட் டாளர்களையும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் இணைக்கும் சேவையை ஆற்றி வருகிறது.