சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாருல் குஃப்ரான் பள்ளிவாசல் திறப்பு

தெம்பனிசில் அமைந்துள்ள டாருல் குஃப்ரான் பள்ளிவாசல் மறுகட்டுமான, மேம்பாட்டுப் பணிகள் நிறைவுபெற்று நேற்று மீண்டும் வழிபாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. 1990ல் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் கடந்த 2016ஆம் ஆண்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்டது. புதிய நிலத்தடி கார் நிறுத்தம், நான்காவது தளம், கூரையுடன் கூடிய மேல்தளம் என மேலும் மூன்று தளங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அலுவலகப் பணிகள், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதற்காக வகுப்பறைகள் ஆகியவற்றுக்காக பள்ளிவாசலுடன் மேலும் இரு துணைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசலில் இனி ஒரே சமயத்தில் 5,500 பேர் தொழுகை நடத்த முடியும். இதன்மூலம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையையும் இது பெறுகிறது. பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்