கலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு ஐந்தாண்டு சிறை, 12 பிரம்படி

கையில் கிடைத்ததை ஆயுதமாகக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு, கடுமையான காயங்களை விளை வித்த சம்பவத்தில் தொடர்புடைய யத்வீந்தர் சிங், 26, என்ற இந்திய நாட்டவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் பன்னிரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஜாலான் புக்கிட் மேராவில் சீலாட் ரோடு சீக்கியக் கோவிலுக்கு அருகே நிகழ்ந்த அந்தக் கலவரத்தில் 50க்கு மேற்பட்டோர் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டது, உரிய ஆவணங்களைக் காண்பிக்காமல் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றது ஆகிய குற்றச்சாட்டு களுடன் இன்னொரு சம்பவத்தில் பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றதையும் யத்வீந்தர் ஒப்புக் கொண்டார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பிரிட்ஜ்’ கருத்தரங்கின் தலைமை நிர்வாகி உச்சநிலை மாநாட்டில் பேசும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.  படம்: அரசாங்க முதலீட்டு நிறுவனம்/பொருளியல் வளர்ச்சிக் கழகம்

19 Apr 2019

புத்தாக்கமும் தொழில்நுட்ப நுண்ணறிவும் முக்கியம்

திரு முகம்மது இஸ்கந்தர் ஷா மோதிய எச்சரிக்கை குறியிடப்படாத சாலைத் தடை. படங்கள்: நூர்சைரா ரீஸிகி ஃபேஸ்புக்

19 Apr 2019

சாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு