ஈராண்டு தடை பாதியாகக் குறைப்பு

சிட்டிபேங்க் முன்னாள் தொடர்பு நிர்வாகி ஸெங் ஸியுமெய்க்கு விதிக்கப்பட்ட ஈராண்டு தடையை துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் ஓராண்டாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவரைத் தவறாக வழிநடத்தும் வகையில் பொய் சொன்னதால் திருவாட்டி ஸெங், நிதித் துறையில் பணிபுரிய ஈராண்டு தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடந்த ஆண்டு மே 14ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என நாணய ஆணையம் அறிவித்திருந்தது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டிலேயே சிட்டிபேங்க் அவரைப் பணிநீக்கம் செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருவாட்டி ஸெங் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, அவரது மனு குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய மேல் முறையீட்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
திருவாட்டி ஸெங்கின் மேல்முறையீடு குறித்து விசாரித்த அந்த ஆலோசனைக் குழு, தனது பரிந்துரையை திரு தர்மனிடம் சமர்ப்பித்தது. அதை ஏற்று, திருவாட்டி ஸெங்கின் தடையை அவர் ஓராண்டாகக் குறைத்து அறிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

வேலை-வாழ்க்கை சமநிலை இளம் தம்பதியரின் முக்கிய பிரச்சினை