அடுத்தவரின் கடனட்டையைக் கொண்டு $18,000 முறைகேடு

அடுத்தவரின் கடனட்டையைக் கொண்டு $18,000 முறைகேடு

1 mins read

ஏஎக்ஸ்எஸ் இயந்திரத்தில் இன்னொருவர் மறந்துபோய் விட்டுச்சென்ற கடன் அட்டையைக் கொண்டு $18,000க்கும் மேல் பொருட்கள் வாங்கியதாக சந்தேகத்தின்பேரில் 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல்போன தமது கடனட்டை மூலம் பல பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்திருப்பதாக போலிஸ் தெரிவித்தது. ஈசூன் அவென்யூ 2ல் உள்ள ஒரு ஏஎக்ஸ்எஸ் இயந்திரத்தில் இருந்து அந்தக் கடனட்டையைச் சந்தேக நபர் எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் அந்தக் கடனட்டையைக் கொண்டு நகைகள், மின்னணுச் சாதனங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை அவர் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருட்களுடன் $1,000 ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் தெமாசெக் பொலிவார்டில் அந்த ஆடவரைக் கைது செய்தனர். அடுத்தவரின் உடைமையை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அந்த ஆடவருக்கு ஈராண்டு வரை சிறையும் அபராதமும் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.