‘முஸ்லிம்கள் பிற சமயத்தாருடன் இணக்கத்தைத் தொடர வேண்டும்’

சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள் மற்ற சமயத்தாருடன்  ஒற்றுமையாக வாழ்வதைத் தொடர வேண்டும் என்று சமயத் தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல் களில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்தை ‘பெருந் துயரம்’ என சிங்கப்பூர் முஸ்லிம் சமயத் தலைவர்கள் குறிப்பிட்டனர். இங்குள்ள 70 பள்ளிவாசல்களில் நேற்று நண்பகல் தொழுகையின் போது சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) சிறப் புரையை வாசித்த சமயத் தலை வர்கள், சகிப்புத்தன்மையின்மை, வெறுப்புணர்வுப் பிரசாரம் ஆகிய வற்றால் ஏற்படும் அபாயங்களை நினைவூட்டுவதாக கிறைஸ்ட்சர்ச் சம்பவம் அமைந்துள்ளதாகக் குறிப் பிட்டனர்.
“முஸ்லிம் சமூகமாக, நமது இதயங்களையும் மனங்களையும் தூய்மையானதாகவும் பாதுகாப் பானதாகவும் வைத்திருக்க வேண் டியது நமது கடமை,” என்று முயிஸ் வலியுறுத்தியுள்ளது.
பிற சமயங்களைச் சேர்ந்த வர்கள் மீது வெறுப்பும் விரோதமும் கொள்ள இடமளிக்கக்கூடாது என்றும் அமைதியாகவும் ஒற்றுமை யுடனும் வாழும் சிங்கப்பூர் மரபை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முயிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டவனை யும் அவனது செயல்களையும் வன்மையாகக் கண்டித்த சிங்கப் பூர் ‘இமாம்’கள், அவனைப் போன் றோர் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினர்.
“ரத்தம் சிந்த வைப்பதும் பல இன, சமய மக்களிடையே ஒற்று மையைக் குலைப்பதுமே அவர் களின் விருப்பம். வாழ்வின் புனிதம் மீதும் சமயம், வழிபாட்டுத் தலங்கள் மீதும் அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை,” என்று முயிஸின் உரை கூறுகிறது.
அதே நேரத்தில், தவறிழைத்த வர்களை மன்னித்தருள வேண்டி யதன் அவசியத்தையும் சமயத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon