மலேசிய ஆடவரின் மரண தண்டனை நிறைவேற்றம்

கொலைக் குற்றத்திற்காக மலே சியர் ஒருவருக்கு சாங்கி சிறைச் சாலையில் நேற்று மரண தண் டனை நிறைவேற்றப்பட்டது.
சரவாக்கின் காப்பிட் பகுதி யைச் சேர்ந்த மைக்கல் கேரிங், 29 (படம்), என்ற அந்த ஆடவர் கொலைக் குற்றம் புரிந்ததை 2015ல் சிங்கப்பூர் உயர் நீதி மன்றம் உறுதிசெய்தது. அவரது மேல்முறையீட்டு மனுவும் 2017ல் நிராகரிக்கப்பட்டது.
மைக்கல் கேரிங், சரவாக்கைச் சேர்ந்த டோனி இம்பா ஆகியோர் உள்ளிட்ட கும்பல் ஒன்று 2010ல் காலாங்கில் பலரைத் தாக்கி, தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது. அதில் மூவர் கடு மையாகக் காயமடைந்தனர்
தாக்குதலில் மண்டையோடு உடைந்து, இடது கை துண் டிக்கப்பட்டு, கழுத்திலும் முது கிலும் ஆழமான வெட்டுக்காயம் அடைந்து, தோள்பட்டை  எலும்பு உடைந்து திரு சண்முகநாதன் டில்லிதுரை, 41, என்ற இந்தியர் உயிரிழந்தார்.
திருட்டில் ஈடுபட்டதற்காக இம்பாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, மைக்கல் கேரிங் கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வலி யுறுத்தி சிங்கப்பூர் அரசாங்கத் திற்குக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்க இருப்பதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதேபோல, கேரிங்கின் பெற் றோரும் சிங்கப்பூர் அரசாங்கத் திற்கு அனுப்பிய கருணை மனு வும் நிராகரிக்கப்பட்டது.