பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

குவீன்ஸ்டவுனில் பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் 66 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார்.
ஜாலான் புக்கிட் மேரா-அலெக் சாண்ட்ரா ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் மாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்திற்குக் காரணமான எஸ்எம்ஆர்டி டாக்சி ஓட்டுநர், டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்த போது சுயநினைவை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டதாகக் கூறப் பட்டது.
இந்தச் சம்பவத்தில் அந்த 72 வயது டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயமடைந்ததாக போலிஸ் தெரிவித்தது.
சம்பவம் குறித்து இரவு 7 மணிக்குத் தகவல் கிடைத்ததாக வும் அந்த ஓட்டுநரும் 32, 66 வயதுகளில் இருந்த இரு பெண் களும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலிஸ் கூறியது.
பின்னர், 66 வயதான மாது சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழந்ததாகத் தெரி விக்கப்பட்டது.
விபத்து நிகழ்வதற்கு முன்பாக அந்த டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்துவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலிஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
விபத்து குறித்த காணொளி ‘எஸ்ஜி ரோடு விஜிலன்ட்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், சிவப்பு விளக்கு எரிந்தபோதும் திடீரென வலது பக்கம் தமது வாகனத்தைத் திருப்பும் அந்த டாக்சி ஓட்டுநர், முன்னால் நின்றிருந்த காரை முந்திச் சென்று, எதிர்த்திசையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி குறுக்கே சென்று பாதசாரிகள் மீது மோதுவது தெரிகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon