ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 54 விமானங்கள் தரையிறக்கம்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குத்தகைத் தொகையைச் செலுத்த முடியாததால் நேற்று மேலும் ஏழு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் தரையிறக்கம் செய்த விமானங்களின் எண் ணிக்கை 54ஆக உயர்ந்தது.
கிட்டத்தட்ட ரூ.8,000 கோடி (S$1.56 பில்லியன்) கடனில் தத் தளிக்கும் அந்த நிறுவனத்தில் 23,000 பேர் பணிபுரிகின்றனர். 
இந்நிலையில், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கு வோம் என்றும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, ஏப்ரல் 30ஆம் தேதி வரை 13 அனைத்துலக வழித்தடங்களில் தனது சேவையை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.
அவற்றுள் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட, வாரம் ஏழு முறை இயக்கப்படும் புனே-சிங்கப்பூர் சேவையும் அடங் கும். அதேபோல, நாளொன்றுக்கு இருமுறை இயக்கப்படும் பெங்க ளூரு-சிங்கப்பூர் விமானச் சேவை யும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அபுதாபி, தம்மாம், டாக்கா, ஹாங்காங், ரியாத் ஆகிய நகரங்களுக்கும் மும்பையில் இருந்து அபுதாபி, பஹ்ரேன், தம்மாம், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கும் ஏப்ரல் 30 வரை ஜெட் ஏர்வேஸ் விமானங் களை இயக்காது.
மும்பை-மான்செஸ்டர் விமான சேவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஏற்கெனவே அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன், டெல்லி, மும்பையில் இருந்து காத்மாண்டு, பேங்காக், தோஹா, குவைத், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கான விமானச் சேவைகளின் எண்ணிக் கையும் அந்த நிறுவனம் குறைத்து உள்ளது.
நாளொன்றுக்கு 600 விமானச் சேவைகளுக்கு மேல் வழங்கி வந்த ஜெட் ஏர்வேஸ், இப்போது அதில் நான்கில் ஒரு பங்கை மட் டுமே வழங்கி வருவதாகக் கூறப் படுகிறது.