மின்ஸ்கூட்டர்கள் திருட்டு:  20 வயது சந்தேக நபர் கைது

மின்ஸ்கூட்டர்களைத் திருடி இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் 20 வயது ஆடவரை போலிஸ் கைதுசெய்து இருக்கிறது. பீஷான் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே சைக்கிள்களை நிறுத்திவைக்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மின்ஸ்கூட்டர் ஒன்றைக் காணவில்லை என்று இம்மாதம் 13ஆம் தேதி முற்பகல் சுமார் 11.30 மணிக்கு போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 
தங்ளின் போலிஸ் பிரிவு அதிகாரிகள் சந்தேகப் பேர்வழியை அடையாளம் கண்டு அவரை மார்ச் 21ஆம் தேதி கைது செய்தார்கள். மின்ஸ்கூட்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்தச் சந்தேகப்பேர்வழி நாடு முழுவதும் இதேபோன்ற மின்ஸ்கூட்டர் திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.