எண்ணெய்த் தொட்டியில் தீ:  யாருக்கும் காயம் இல்லை

ஜூரோங் தீவில் இருக்கும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு தொட்டி ஒன்றில் நேற்று தீ மூண்டது. காலை சுமார் 9.45 மணிக்கு மூண்ட தீயில் எவருக்கும் காயம் இல்லை     என்று தெரிவிக்கப்பட்டது. 
  அந்தத் தொட்டியில் இருந்த கசடு தீப்பிடித்ததாகவும்      தீ மூண்டபோது அந்த எண்ணெய்த் தொட்டி காலியாக இருந்தது என்றும் அதில் பராமரிப்புப் பணி நடந்து வந்தது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 
எக்ஸான்மொபில் நிறுவனத்தின் அவசரகால குழுவும் குடிமைத் தற்காப்புப் படையும் உடனடியாகச் செயலில் இறங்கி அந்தத் தீயை அணைத்துவிட்டன.