பல சைக்கிள்களைத் திருடி இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் போலிசார் 57 வயது ஆடவரைக் கைது செய்து இருக்கிறார்கள். பிடோக் நார்த் அவென்யூ 2ல் உள்ள 411வது புளோக்கிலிருந்து ஒரு சைக்கிள் காணாமல் போய்விட்டது என்று இம்மாதம் 21ஆம் தேதி இரவு சுமார் 11.50 மணிக்கு போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலிஸ் புகைப்படச் சாதனங்களில் இருந்த தோற்றங்களை வைத்தும் பலரிடம் விசாரணை நடத்தி அந்தச் சந்தேகப் பேர்வழி யார் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
சைக்கிள்கள் திருட்டு: சந்தேகத்தின் பேரில் 57வயது ஆடவர் கைது
1 mins read

