சிங்கப்பூரில் சீன அமைச்சர்

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரத்துறை அமைச்சர் சோங் தோ நேற்று டாக்டர் விவியனைச் சந்தித்தார்.
சீன அமைச்சருக்கு சிங்கப்பூர் அமைச்சர் விருந்தளித்துச் சிறப்பித்தார். இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் சிறப்பான இரு தரப்பு உறவுகளை இரு தலைவர் களும் மறுஉறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சு தெரி வித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் பரந்த அளவிலான பயனுள்ள ஒத்துழைப்பு குறித்தும் இருவரும் விவாதித்தனர். 
பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். ஒளிவுமறைவு இல்லாத, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக முறை முக்கியம் என்பதை சிங்கப்பூர்-சீன அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.