நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய  5 உணவு நிறுவனங்களின் தரம் குறைப்பு

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நிகழ்ந்த நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு உணவு விநியோகிப்பாளர்கள் மற் றும் ஓர் உணவகத்தின் சுகாதாரத் தரம் ‘சி’ நிலைக்குக் குறைக்கப்பட்டு உள்ளது.
அந்த நச்சுணவு சம்பவங்களில் மொத்தம் 230க்கும் அதிகமான வர்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் சுகாதார தரம் குறைக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் அடங்கி உள்ளன. 
பிடோக் நார்த் ஸ்திரீட்5, அட் மிரல்டி, அல்ஜுனிட் அவென்யூ4, ஹாவ்லக் ரோடு ஆகிய இடங் களில் அவை அமைந்துள்ளன.  
நச்சுணவு சம்பவங்கள் சென்ற ஆண்டு ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்ததாக வாரியம் கூறியது.