சுடச் சுடச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

இர்ஷாத் முஹம்மது

சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முன்னர் இந்நாட்டில் கால்பதித்த முன்னோர்களின் அனுபவங்களும் இன்று குடிமக்களாக இருக்கும் அவர்களின் சந்ததியினரின் கதை களும் கண்காட்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகை யில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள நாகூர் தர்கா இந் திய முஸ்லிம் மரபுடைமை நிலையத் தில் புதிய கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. 
‘சிங்கப்பூர் முதல் சிங்கப்பூரர் கள் வரையில் - முன்னோடிகளும் சந்ததியினரும்’ என்ற தலைப்பில் 100 முன்னோடிகளின் விவரங்கள் அழகிய அட்டைகளில் பொறிக்கப் பட்டு வருகையாளர்களின் பார் வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்திய முஸ்லிம் முன்னோ டிகளின் வரலாறு மட்டுமல்லாமல் மற்ற இனத்தினர், மதத்தினரின் குறிப்புகளும் அதில் இடம்பெறு கின்றன.
“பல்லின, பல சமய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் சிங் கப்பூரில் நம் முன்னோர்கள் வேறு பாடுகளைக் களைந்து சவால் களைக் கடந்தனர். ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாக முன்னேறி னர். ஆகையால் மற்ற இனம், சமயங்களைச் சேர்ந்தவர்களையும் இந்தத் திட்டத்தின்கீழ் இணைத் துள்ளோம்,” என்று கூறினார் நேற்று அறிமுகம் கண்ட புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். 
இந்திய முஸ்லிம் சமூகத்தில் முன்னோடிகளாக இருந்த பழம் பெரும் வர்த்தகர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், பல துறைகளைச் சேர்ந்த பொதுமக்கள் என அனை வரையும் உள்ளடக்கிய கண் காட்சியை உருவாக்க சுமார் ஆறு மாதங்கள் ஆனதாக அவர் கூறி னார். 
தேசிய நினைவுச் சின்னங் களில் ஒன்றான நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் சமூகத் தலைவர்கள், கண்காட்சியில் அங்கம் வகித்த முன்னோர்களின் சந்ததியினர் என சுமார் 100 பேர் நேற்றுக் காலை கூடியிருந்தனர். 
சுற்றுபுற, நீர்வளத்துறை அமைச்சரும் முஸ்லிம் விவகா ரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல் கிஃப்லி கண்காட்சியைத் திறந்து வைத்தார். 
இவ்வாண்டின் இறுதிவரையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஆகப் பழமையான முன்னோடி 1843ஆம் ஆண்டு பிறந்த ஷேக் இஸ்மாயில் மல்லா வின் வரலாறு. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon