சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி

அட்மிரல்டி பிளேஸ் மால் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய ஈரச்சந்தை புதிய இடத்துக்கு மாறிச் செல்வது குறித்த தகவல் அளிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டிருந்தது குடியிருப்பாளர்களிடமும் பொதுமக்களிடமிருந்து அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக அந்தச் சந்தையின் நடத்துநர், நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் சுற்றறிக்கைகள் விநியோகிக்கப்பட்ட குடியிருப்பாளர்க ளுக்கு மன்னிப்புக் கடிதங்களைக் கொடுக்க தீர்மானித்துள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையில் ஆங் கிலம், சீனம், மலாய் ஆகியவற்று டன் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப் பட்டது.
இந்தச் சுற்றறிக்கையின் புகைப்படத்தை திருமதி விஜயா கந்தசாமி என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து, அச்செயலைக் கண்டித்தார்.
“தமிழை எழுதவும் படிக்கவும் தெரிந்த அதிகமானோர் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். இது எந்த மொழி? நமது சொந்த நான்கு அதிகாரத்துவ மொழிகள் பற்றி தெரியாத அந்த நபரை உங்கள் குழுவிலிருந்து அகற்றி விடுங்கள்,” என்று எழுதியிருந்தார்.
சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத் தில் மலாய், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரத் துவ மொழிகளாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.
இதைப் பார்த்த மேலும் சில இணையவாசிகள், சுற்றறிக்கை
யில் உள்ள மலாய் சொற்களிலும் தவறுகள் இருந்ததாகக் கூறினர்.
சுற்றறிக்கையில் ஏற்பட்ட தவறு பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கருத்துரைத்த செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர், “ஈரச்சந்தை
யின் நடத்துநர் தன்னிச்சையாக இந்தச் சுற்றறிக்கையைத் தயாரித் துள்ளார்.
“சுற்றறிக்கை அச்சடிக்கக் கொடுப்பதற்கு முன் எந்த நாடாளு மன்ற உறுப்பினரிடமும் நகர மன்ற உறுப்பினரிடமும் ஆலோ சனை பெறவில்லை. மேலும் அந்த நடத்துடருக்கு தமிழ் அல்லது இந்தி மொழி பேசத் தெரியாது. 
“சந்தையின் இடமாற்றம் பற் றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நல் லெண்ணத்தில் அவர் அவ்வாறு செய்துள்ளார்,” என்று விவரித்தார்.
தவறுதலான மொழிபெயர்ப்பு பற்றி தமது தொகுதி இயக்குநரிட மிருந்து தகவல் பெற்றவுடன், தாம் சந்தை நடத்துநர் திரு வெய்ன் நியோவுடன் தொடர்பு கொண்டதாக திரு விக்ரம் தெரி வித்தார்.
அப்போது விநியோகிக்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளும் மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டன என்றும் நடந்த தவற்றுக்கு தாம் பெரிதும் வருந்துவதாகவும் திரு நியோ தம்மிடம் கூறியதாக திரு விக்ரம் கூறினார்.
“இந்த மோசமான தவற்றுக்கு நாங்கள்தான் காரணம்,” என்று ஒப்புக்கொண்ட 33 வயது திரு நியோ, “தற்போதைய சந்தை விரைவில் மூடப்படும் என்றும் புதிய சந்தை திறக்கப்படவிருக்கும் இடம் பற்றி தெரிவிக்க எங்கள் குழு சுற்றறிக்கைகளைத் தயாரித் தது.
“புதுப்பிப்புப் பணிகள்  சுமார் ஒராண்டு நீடிக்கும். அந்த ஓராண் டுக்கு சந்தை கடைகளின் வாட கைதாரர்கள் வருமானம் இல்லா மல் இருக்க முடியாது. நாங்கள் அவர்களின் நலன்களைப் பாது காக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் புதிய இடத்தைத் தேடுவதில் கடுமை யாகப் பணியாற்றினோம்,” என் றார்.
சந்தை இடமாற்றத்தில் பல் வேறு அமைப்புகள் எங்களுக்கு உதவி வந்ததால், இந்தச் சுற்ற றிக்கை விவகாரத்தையும் அவர்க ளிடம் திணிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதை நாங்களே செய்தோம்,” என்று திரு நியோ மேலும் விளக்கினார்.
“இதுபோன்ற முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கத் தயாராக இருக் கிறார்கள். மொழிபெயர்ப்புகள் சரி யாக உள்ளதை உறுதிப்படுத்த அர சாங்க அமைப்புகளிடம் காண்பித்து, ஒப்புதல் பெற்ற பிறகே அவர் சுற்ற றிக்கையை அச்சடித்திருக்க வேண் டும்,” என்று தாம் திரு நியோவுக்கு ஆலோசனை அளித்ததாக திரு விக்ரம் கூறினார்.
“மொழிபெயர்ப்பில் உதவ அதில் திறமை வாய்ந்தோரிடம் உதவி கேட்கலாம். எதிர்காலத்தில் ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் எனும் அதிகாரத்துவ மொழிகளில் சுற்றறிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று திரு நியோ விடம் கூறினேன்,” என்று திரு விக்ரம் சொன்னார்.
இதற்கிடையே, செம்பவாங் குழுத் தொகுதியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான திரு அம்ரின் அமின் நேற்றுக் காலை அல்மிரல்டி சந்தைக்குச் சென்று, சந்தை நடத்துநர் திரு நியோவிடம் பேசியதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“ஏற்பட்ட தவற்றுக்கு திரு நியோ தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் எந்த தீய எண்ணமும் இல்லை,” என்றார் திரு அம்ரின்.
“மொழிபெயர்க்கப்பட்ட வாச கங்களைச் சரிபார்க்க யாரை அணு கலாம்? தமிழுக்கும் இந்திக்கும் இடையிலான வேறுபாட்டை அறி யவோ, தவறாக எழுதப்பட்ட மலாய் வாசகங்களைக் கண்டறிய ஒரு மொழி நிபுணர் தேவையில்லை. 
“இது பிரதிபலிக்கப்பட வேண் டும். பன்முகத்தன்மையையும் உள் அடக்குதலையும் இணைத்துக் கொள்ளும் பணியை நாம் தொடர வேண்டும்,” என்றும் திரு அம்ரின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறி யிருந்தார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்