மெர்டேக்கா தலைமுறை உதவித் திட்டம் குறித்து மூத்த குடிமக்கள் விரைவில் மேலும் பல விவரங் களைத் தெரிந்துகொள்வார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் அங்காடி நிலையங் கள் போன்ற இடங்களிலும் முதியோருக்கு முதியோர் தலை முறைத் தூதுவர்கள் பல விவரங் களையும் சொல்லி விளக்குவர். அந்தத் தூதுவர்கள் வீடு வீடாகச் சென்று மெர்டேக்கா தலை முறை சுகாதாரத் திட்டம் குறித்து முதியோருக்கு விளக்கி வருகிறார் கள். இந்த முயற்சியில் மேலும் ஒருபடியாக அவர்கள் வேலை யிடங்களுக்கும் அங்காடி நிலையங் களுக்கும் சென்று முதியோர்களைச் சந்தித்து பல தகவல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்த இருக்கிறார்கள். இப்படிச் செய்வதற்கான தேவை இருக்கிறது என்று மூத்த சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று தெரிவித்தார். முன்னோடி தலைமுறைகளைப் போல் அல்லாமல் மெர்டேக்கா தலைமுறையினர் நன்கு படித்தவர் கள். நல்ல உடல்நலத்தையும் கொண்டவர்கள். சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மெர்டேக்கா திட்டம்: மேலும் விளக்க புதிய முயற்சிகள்
1 mins read
கம்ஃபர்ட்டெல்குரோ கேளிக்கை விழா நேற்று நடந்தது. அதில் தொண்டூழியர் ஒருவர் முதியவருக்கு மெர்டேக்கா தலைமுறை சுகாதார உதவித் திட்டம் பற்றி பலவற்றையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ் -

