சுடச் சுடச் செய்திகள்

சுற்றிப்பார்க்க வந்து வேலை செய்யும் வெளிநாட்டினர்: அமைச்சு எச்சரிக்கை

வெளிநாட்டினர் பலரும் சிங்கப்பூரை சுற்றிப்பார்ப்பதற்கு உரிய விசாவை வாங்கிக்கொண்டு அன்றாடம் இங்கு வந்து சட்டவிரோத மாக வேலை செய்து சம்பாதிக் கிறார்கள். 
பக்கத்தில் இருக்கும் பாத்தாம் தீவிலிருந்து நாள்தோறும் வெறும் கையோடும் பெரும் கனவோடும் சிங்கப்பூருக்கு பலரும் வருகிறார்கள். 
அப்படி வந்தவர்களில் ஒருவர், டினா, 36, என்பவர். 
சிங்கப்பூர்தான் தனது கனவு என்கிறார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்த மாது. 
“பாத்தாமில் செய்யும் அதே வேலையை சிங்கப்பூரில் செய்தால் 10 மடங்கு அதிகம் சம்பளம் கிடைக்கிறது. பாத்தாமில் எனக் கும் வேலை இல்லை. என் கண வருக்கும் வேலை இல்லை,”  என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு தடவையும் சிங்கப் பூர் வரும்போதும் 23 நாட்கள் தங்கி வீட்டு வேலை பார்த்து $760 முதல் $1,330 வரை ஈட்டுவதாக இவர் கூறுகிறார். 
எப்போதுமே வீதிகளில் போலிஸ்காரர்கள் சுற்றி சுற்றி வருவதால்தான் பயந்தபடியே இத் தகைய காரியத்தில் ஈடுபடுவதாகக் கூறுகிறார். 
இவர் இப்படி ஓராண்டுக்கும் அதிக காலம் சட்டவிரோதமாக வேலை பார்க்கிறார். 
இதே காரியத்தைச் செய்த இவருடைய தோழிகள் ஐந்து பேர் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு திரும்பி வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
செந்தோசாவில் இருக்கும் சூதாட்டக் கூடம்தான் அதிகாரி களிடம் இருந்து தப்பிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடம் என் கிறார் டினா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon