எஸ்ஐஏ விமான இயந்திரத்தில் பயணிகள் வெளியேறும் பாலம் இடித்தது: சேவை ரத்து

எஸ்ஐஏ விமான இயந்திரத்தில் பயணிகள் வெளியேறும் பாலம் இடித்தது: சேவை ரத்து

2 mins read
06b4ac7a-a396-4734-ae16-07253f1f700b
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நியூவார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமான நிலையத்தில் பயணிகள் தரை இறங்குவதற்கான நகரும் பாலம் விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் இடித்து விட்டதே அதற்குக் காரணம். எஸ்கியூ22 விமானம் சனிக் கிழமை நியூவார்க் விமான நிலையத்தில் தரை இறங்கியதாகவும் அந்த விமானம் அதற்குரிய இடத் தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார். விமானத்திலிருந்து பயணிகள் தரையிறங்குவதற்கு உதவும் பாலம் அந்த விமானத்தின் கதவுப் பகுதியில் இணைக்கப்பட்டபோது அந்தப் பாலம் விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் இடித்து விட்டது என்று அவர் விளக்கினார். சிங்கப்பூரிலிருந்து சென்று தரையிறங்கி இருந்த அந்த விமா னத்தில் 150 பயணிகளும் 17 ஊழியர்களும் இருந்தார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாகக் கீழே இறங்கிவிட் டார்கள். பிறகு அந்த விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. அதே நாளன்று நெவார்க் நகரி லிருந்து சிங்கப்பூருக்கு 141 பயணிகளுடன் புறப்படவிருந்த அந்த எஸ்கியூ21 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரி வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வரவிருந்த பயணிகள், மரியாட் நியூவார்க் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட னர். தேவையான உதவிகள் வழங் கப்பட்டன. அவர்கள் அடுத்த விமானத்தில் வரவிருந்தார்கள். "பயணிகளுக்குரிய ஏற்பாடு கள் செய்து தரப்பட்டு உள்ளன. அவர்களுக்கு ஏற்பட்ட இந்தச் சங்கடத்திற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது," என்று அந்தப் பேச் சாளர் கூறினார்.