சுடச் சுடச் செய்திகள்

ரசாயன கழிவு பிரச்சினை: சிங்கப்பூரர் உட்பட 3 பேர் மீது குற்றச்சாட்டு 

மலேசியாவில் ஜோகூர் பாரு மாநிலம் பாசிர் கூடாங்கில் சுங்கை கிம் கிம்மில் ரசாயனக் கழிவுகள் குவிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு இயக்குநர்கள் மீதும் ஒரு லாரி ஓட்டுநர் மீதும் ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது. 
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் வாங் ஜின் ஜோ, 34, என்ற சிங்கப்பூரரும் யாப் யோக் லியாங், 36, என். மரிதாஸ், 35, என்ற மலேசியர்களும் அடங்குவர். லாரி ஓட்டுநரான மரிதாஸ், மார்ச் 7ஆம் தேதி சுங்கை கிம் கிம்மில் ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டியதாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. அவருடன் சேர்ந்து இந்தக் காரியத்துக்குச் சதி செய்ததாக வாங் மீதும் யாப் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த மூவரும் நேற்று குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon