ஸ்கூட் விமானத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தம்

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட ஸ்கூட் விமானம், தைப்பேயில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் உட்பகுதியில் வழக்கத்திற்கு மாறான காற்றழுத்தம் (abnormal cabin pressure) ஏற்பட்டதால் அனைவரும் பிராணவாயு கவசங்களை அணிய வேண்டியிருந்தது.

அப்போது விமானத்திற்குள் இருந்த ஒரு குழந்தை பலமுறை வாந்தி எடுத்ததாக அதன் தாயார் கூறியதாக ஸ்கூட் நிறுவனத்தின் பேச்சாளர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தெரிவித்தார். இதனைத் தவிர வேறு யாருக்கும் காயங்களோ வேறு வித உபாதைகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் பேச்சாளர் தெரிவித்தார். 

TR996 விமானத்தில் அப்போது 180 பயணிகள் இருந்ததாகவும் தைப்பேயின் தௌயான் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு அவர்கள் அனைவரும் விமானத்தைவிட்டு பாதுகாப்பாக வெளியேறியதாகவும் ஸ்கூட் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தால் தைப்பேயிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட TR997 சேவையின் பயணிகளும் தாமதமடைந்தனர்.

விசாரணைகளுக்காக அந்த விமானத்தின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பிரிட்ஜ்’ கருத்தரங்கின் தலைமை நிர்வாகி உச்சநிலை மாநாட்டில் பேசும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.  படம்: அரசாங்க முதலீட்டு நிறுவனம்/பொருளியல் வளர்ச்சிக் கழகம்

19 Apr 2019

புத்தாக்கமும் தொழில்நுட்ப நுண்ணறிவும் முக்கியம்

திரு முகம்மது இஸ்கந்தர் ஷா மோதிய எச்சரிக்கை குறியிடப்படாத சாலைத் தடை. படங்கள்: நூர்சைரா ரீஸிகி ஃபேஸ்புக்

19 Apr 2019

சாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு