அலெக்சாண்ட்ரா ரோட்டில் பாதசாரிகள் மீது டாக்சி மோதிய சம்பவம்: எதுவுமே நினைவில்லை என்கிறார் ஓட்டுநர்

எஸ்எம்ஆர்டி டாக்சி ஓட்டுநர் ஒருவர் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது மயங்கிவிட்டார். பாதசாரிகள் மீது வாகனம் மோதிய தில் மாது ஒருவர் கொல்லப்பட்டார். 
என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என்று மருத்துவமனையில் நினைவு திரும்பியபோது அந்த 72 வயது டாக்சி ஓட்டுநர் கூறினார். 
அந்த விபத்தில் அந்த ஓட்டு நருடன் 66 மற்றும் 32 வயதுள்ள இரண்டு மாதர்களும் காயம் அடைந்துவிட்டார்கள். மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். 66 வயது மாது ஒருவர் மாண்டுவிட்டார். 
இந்தச் சம்பவம் குவீன்ஸ்வே-அலெக்சாண்ட்ரா ரோடு சந்திக்கும் இடத்தில் மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நிகழ்ந்ததாக போலிஸ் தெரிவித் தது. 
மருத்துவமனையில் டாக்சி ஓட் டுநருக்கு சுயநினைவு திரும்பிய போது நடந்தது எதுவுமே தனக்குத் தெரியாது என்று அவர் கூறியதாக அவருடைய புதல்வர் ‌ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தித்தாளிடம் கூறினார். 
இப்போது அந்த விபத்து பற்றி போலிஸ் புலன்விசாரணை நடத்து கிறது. அதில் அந்த டாக்சி ஓட்டு நர் உதவி வருகிறார். 
டாக்சி ஓட்டுநருக்கு உடல்நலப் பிரச்சினை இருந்ததாக தங்களுக் குத் தெரியவில்லை என்றும் அந் தப் புதல்வர் கூறினார்.