பயன்படுத்தப்பட்ட 'டயர்' பதனி டும் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் மீது நேற்று ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிங்கப்பூரரான 34 வயது வெங் ஜிங் சாவ், அவரது மலேசிய பங்கு தாரரான 36 வயது யாப் யோங் லியாங் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட தலா 15 குற்றச்சாட்டு களையும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஜைலானி ரஹ்மான் முன் னிலையில் மறுத்தனர். அந்தக் குற்றச்சாட்டுகளின்படி, வெங்கும் யாப்பும் சுற்றுப்புறத் தர வழிகாட்டிகள் சட்டங்களின்படி தங்கள் நிறுவனத்தின் கழிவுப் பொருள் நிர்வாக முறையில் கவ னம் செலுத்த தவறிவிட்டனர் என்று கூறப்பட்டது. அவர்கள் இந்தக் குற்றத்தை இம்மாதம் 12ஆம் தேதி பிற்பகல் 12.25 மணிக்கு, 'பி டெக் ரிசோ சஸ்' எனும் தங்கள் நிறுவனத்தில் புரிந்ததாகவும் குற்றப்பத்திரிகை யில் தெரிவிக்கப்பட்டது. அதே சட்டத்தின்படி, அவர்கள் இருவரும் காற்றுத்தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதாகவும் கழி வுகள் முறையாக அப்புறப்படுத்தப் படுகிறதா என்பதைக் கண் காணிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெங், யாப் இருவரும் குற்றவா ளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் 100,000 ரிங்கிட் (S$33,200) வரை அபராதம் அல்லது இரண்டு ஆண் டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதற்கிடையே, 'பி டெக் ரிசோ சஸ்' நிறுவனத்தின் மீதும் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றையும் வெங்கும் யாப்பும் மறுத்தனர். வழக்கை ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, கழிவுகளை முறையின்றி ஆற்றில் கொட்டியதற்காக ஆளுக்கு தலா 15,000 ரிங்கிட் பிணையிலும் காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற் படுத்தியதற்காக ஆளுக்கு தலா 3,000 ரிங்கிட் பிணையிலும் இரு வரையும் விடுவித்தார். மேலும் சிங்கப்பூரரான வெங் குக்கு, மலேசியர் ஒருவரின் உத் தரவாதம் வேண்டும் என்றும் இந்த வழக்கு முடியும் வரை பாசிர் கூடாங் போலிஸ் நிலையத்தில் மாதத்தின் முதல் நாளன்று முன் னிலையாக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாசிர் கூடாங் ரசாயனக் கசிவு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவர் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். படம்: பெர்னாமா

