பணிப்பெண்ணுக்கு 26 மாதச் சிறை

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ மன் லியோங்கின் வீட்டில் இருந்து $34,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய இந்தோனீசியப் பணிப்பெண்ணான 45 வயது பார்டி லியானிக்கு (படம்) நேற்று 26 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது.  அவர் அந்தக் குற்றங்களை 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை புரிந்துள்ளார். 
லியானி இந்தத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போகிறார் என்று அறியப்படுகிறது. அவருக்கு $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.