பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ரயில் நிலையங்கள் முன்கூட்டியே மூடல்

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் செல்லும் ரயில் பயணிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் மாதம் வரை சில நிலையங்களில் ரயில்களுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதே வேளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிலையங்கள் முன்கூட்டியே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பாதைகளிலும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே அதற்குக் காரணம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஏப்ரல் மாதத்தின் நான்கு வார இறுதி நாட்களில், ஆர்ச்சர்ட் நிலையத்துக்கும் சிட்டி ஹால் நிலையத்துக்கும் இடைப்பட்ட வடக்கு-தெற்கு பாதையில் காலை 7 மணி முதல் 10 முதல் 15 நிமிடம் வரையிலான இடைவெளியில் ரயில்கள் பயணிக்கும்.
அந்தக் காலக்கட்டத்தில் சிட்டி ஹால் நிலையத்துக்கும் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்துக்கும் இடையே வடக்கு-தெற்கு பாதையில் ரயில் சேவை இருக்காது. இந்த இரு நிலையங்களுக்கும் இடையே பயணம் செய்வோர், கிழக்கு-மேற்கு பாதையில் செல்லும் ரயில்களைப் பயன்படுத்தலாம்.
மே, ஜூன் மாதங்களில், கிழக்கு-மேற்கு பாதையில் லாவண்டர் முதல் பிடோக் வரை ஏழு நிலையங்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை களில் இரவு 11 மணிக்கே மூடப்படும். மே 3, 4, 10, 11, 31, ஆகிய வெள்ளி, சனிக்கிழமைகள் ஆகியவையே அந்த நாட் கள் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!