கருத்துகளை நாடுகிறது தேசிய சம்பள மன்றம்

சம்பளங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான விவகாரங் கள் பற்றிய கருத்துகளை நாடு கிறது தேசிய சம்பள மன்றம்.
அந்தக் கருத்துகளை மன்றம் பரிசீலித்து, சம்பளம் தொடர்பான வருடாந்திர பரிந்துரைகளை வெளியிடும்.
முதலாளி, ஊழியர், அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோரை உள்ள டக்கிய தேசிய சம்பள மன்றம் ஏப்ரல், மே மாதங்களில் சந்தித்து பரிந்துரைகள் பற்றி கலந்தாலோ சிக்கும்.
பொதுமக்களின் கருத்துகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தேசிய சம்பள மன்றத்துக்கு டிபிஎஸ் வங்கியின் தலைவர் திரு பீட்டர் சியா தலைமை தாங் குகிறார்.
சிங்கப்பூரின் பொருளியல் செயல்திறன், உள்ளூர், உலக ளாவிய பொருளியல் நிலவரம் ஆகியவற்றை மன்றம் கருத்தில் எடுத்துக்கொண்டு, சம்பளப் பரிந்துரைகளை வரையும் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது.
நாட்டின் பொருளியல் போட் டித்திறன், தொழிலாளர் சந்தை நிலவரம், பணவீக்கம், உற்பத்தித் திறன் வளர்ச்சி ஆகியவையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப் படும்.
கருத்துகளை nwc_secretariat@mom.gov.sg எனும் தேசிய மன்றத்தின் மின் னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது கீழ்காணும் முகவரிக்கு அஞ்சல் வழி அலுப்பலாம்.
National Wages Council, c/o Manpower Wages Planning and Policy Division,
18 Havelock Road, #07-01, Singapore 059764.
அல்லது 65344840 எனும் எண் மூலம் தொலைப்பிரதி அனுப்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!