அங் மோ கியோ நகர மன்றப் பொது மேலாளர், கட்டுமான நிறுவன இயக்குநர் மீது ஊழல் குற்றங்கள் 

அங் மோ கியோ நகர மன்ற பொது மேலாளர் வோங் சீ மெங், 59, இரு கட்டுமான நிறுவனங் களின் இயக்குநர் சியா சின் லான், 63, ஆகிய இருவரும் தங் கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டனர்.
சியாவிடம் இருந்து ரொக்கம், மதுபானங்களுடன் கூடிய ‘கர வோக்கே’ நிகழ்ச்சி எனப் பல வழி களில் வோங் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் கைமாறாக, அங் மோ கியோ நகர மன்றத்தில் பொது மேலாளராக இருந்த வோங், தமது நிலையைப் பயன்படுத்தி சியாவின் நிறுவனங்களுக்கு சாதகமாக ஏலக்குத்தகை முடிவு களை எடுக்கும்படி நகர மன்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்திய தாகச் சொல்லப்படுகிறது.
விக்டர் என அழைக்கப்படும் வோங் 2013 முதல் 2016 வரை அங் மோ கியோ நகர மன்றத்தின் பொது மேலாளராகப் பணியாற்றி னார். 
ஒப்பந்தப் பணிகளை வோங் கையாளும் விதம் குறித்து 2016 செப்டம்பரில் நகர மன்றத்திற்குப் புகார் வந்தது. 
இதையடுத்து, ஒரு மாதத் திற்குப் பின் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவரிடம் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தியது.