சுடச் சுடச் செய்திகள்

லாபம் குறையும் என்றாலும் முதலீட்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நாட்டம் 

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதத்தில் விற் பனையும் லாபமும் குறையும் என்று எதிர்பார்க்கின்றன. 
பொருளியல் சூழ்நிலை பல வீனமாக இருந்தாலும் அவை தங்கள் தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கின் றன என்று ஆய்வு ஒன்று குறிப் பிடுகிறது. 
சிங்கப்பூர் வர்த்தகக் கூட் டமைப்பும் (SBF) டிபி இன்ஃபார் மேஷன் குரூப் என்ற அமைப்பும் சேர்ந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலகட்டத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தொழில் வாய்ப்புகள் எப்படி இருக் கும் என்பதை மதிப்பிட்டு உள்ளன. 
ஜனவரி 14 முதல் மார்ச் 1 வரை அவை 3,000க்கும் அதிக சிறிய, நடுத்தர நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பல தகவல் களையும் திரட்டின. 
சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்கு அடுத்த ஆறு மாதத்தில் விற்பனையும் லாபமும் குறையும் என்று அந்த நிறுவனங்கள் எதிர் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக்கிறது. 
இத்தகைய நிறுவனங்களின் லாப எதிர்பார்ப்புகள் ஆறு காலாண்டுகளில் முதல்தடவை யாக 5.0 என்ற அளவைவிட குறைந்து இருக்கிறது என்று இந்த இரண்டு அமைப்புகளின் அட்டவணை காட்டுகிறது. 
இருந்தாலும் வர்த்தகச் சேவை கள் நீங்கலாக இதர எல்லா துறை களிலுமே முதலீட்டு எதிர்பார்ப்பு கள் அதிகமாக உள்ளதையும் அட்டவணை காட்டுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon