தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் கட்டடத்தில் தீச்சம்பவம்

தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் கட்டடத்தில் தீச்சம்பவம்

1 mins read
c63aa80a-d86a-4d89-a23b-e811f4ad7edf
-

தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ மூண்டதை அடுத்து அங்கிருந்து சுமார் 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

14 மெடிகல் டிரைவ்வில் தீச்சம்பவம் ஒன்று நடந்தது குறித்த தகவல் காலை 11.10 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர் அங்குள்ள தானியக்க நீர்த்தூவிகளால் தீ அணைக்கப்பட்டது.

சம்பவத்திற்கான காரணத்தை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆராய்கிறது.