சிங்கப்பூரில் சைக்கிள் பாதைக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து வட்டாரங்களில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கப் படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. உட்லண்ட்ஸ், தோ பாயோ, கேலாங், சுவா சூ காங், குவீன்ஸ் டவுன் ஆகிய ஐந்து வட்டாரங் களில் சைக்கிள் பாதைகளை ஏற் படுத்துவதற்கான ஏலக்குத்தகை இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று ஆணையம் தெரிவித்தது. இப்போது சைக்கிள் பாதைக் கட்டமைப்பு ஏதும் இல்லாத தோ பாயோவில் 7 கி.மீ. தூரத்திற்கு சைக்கிள் பாதைகள் அமைக்கப் படும். "சைக்கிளோட்டிகளும் பாத சாரிகளும் செல்ல ஏதுவாக பேருந்து நிறுத்தங்கள் போன்ற இப்போதுள்ள உள்கட்டமைப்பு மறுவடிவமைக்கப்படும்," என்று ஆணையம் கூறியுள்ளது. தற்போது 4 கி.மீ. சைக்கிள் பாதைகளையும் 8 கிலோமீட்ட ருக்கு மேலான பூங்கா இணைப்பு வழிகளையும் கொண்டுள்ள உட் லண்ட்சில் மேலும் 20 கிலோ மீட்டருக்கு சைக்கிள் பாதைகள் உருவாக்கப்படும். இதன்மூலம், நாட்டிலேயே பெரிய சைக்கிள் பாதைக் கட்டமைப்பைக் கொண்ட பகுதியாக உட்லண்ட்ஸ் உருமாறும் என ஆணையம் தெரிவித்தது. இந்தப் புதிய சைக்கிள் பாதை கள், அவ்வட்டாரத்தில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும். அத்துடன், வடக்கு-தெற்கு ரயில் பாதையில் அமைந்துள்ள மார் சிலிங், உட்லண்ட்ஸ், அட்மிரல்டி, இவ்வாண்டு இறுதியில் திறக்கப் படவுள்ள தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தில் அமையும் உட்லண்ட்ஸ் சௌத் ஆகிய ரயில் நிலையங்களையும் அவை இணைக்கும். சுவா சூ காங்கில் இப்போது அரை கிலோமீட்டர் தூரத்திற்கே சைக்கிள் பாதை இருக்கும் நிலை யில், அங்கு மேலும் 12 கி.மீ. தூரத்திற்கு சைக்கிள் பாதைகள் அமைக்கப்படும்.
40 கி.மீ. சைக்கிள் பாதை
2 mins read
-

