பல வகையான போதைப்பொருட்கள் சிக்கின; எழுவர் கைது

பல வகையான போதைப்பொருட்கள் சிக்கின; எழுவர் கைது

1 mins read
9c022345-2a95-434d-8eb2-ad17ca88c483
-

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) இம்மாதம் 25ஆம் தேதி இரவு நடத்திய திடீர் சோதனையில் 1.94 கிலோ கிராம் ஹெராயின், 291 கிராம் 'ஐஸ்', 34 கிராம் கெட்டமின், 5 கிராம், கஞ்சா, 838 எரிமின்-5 ,மாத்திரைகள், மூன்று ,எக்ஸ்டசி மாத்திரைகள், என பல வகையான போதைப் பொருட்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $179,000 என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பில் ஏழு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரிடமிருந்து $10,350 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 60 வயது, 65 வயது ஆடவர்கள் ஜாலான் குக்கோவிலும், 48 வயது, 29 வயது, 35 வயது ஆடவர்கள் அங் மோ கியோ அவென்யூ 10லும், 30 வயது, 39 வயது ஆட வர்கள் அங் மோ கியோ ஸ்திரீட் 41, 42 சந்திப்பிலும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 1.94 கிலோ கிராம் ஹெராயின் 924 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்த போதுமானது. 291 கிராம் 'ஐஸ்' 166 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்த போதுமானது என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.