போதைப்பொருள் குற்றங்களுக்காக மாடல் அழகி டெனஷாருக்கு சிறை

போதைப்பொருள் குற்றங்களுக்காக மாடல் அழகி டெனஷாருக்கு சிறை

1 mins read
e764157f-de39-48a1-8f38-0101e0c54774
-

போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட உள்ளூர் பாடல் அழகி டெபி வெலரி டெனஷார் லோங் (படம்), நாட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு நேற்று 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் டெனஷார் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. அதே ஆண்டு நவம்பரில் டெனஷார் நாட்டை விட்டு தப்பித்துச் சென்று, தமது பாஸ்போர்ட் காலாவதியானவுடன் கடந்த ஆண்டு மே மாதம் நாடு திரும்பினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். 33 வயதான டெனஷார் 12 வயது சிறுமியின் தாயார். 2015ல் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து நாடு திரும்பிய டென ஷார் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது உடமைகளைச் சோதனையிட்டபோது அதில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இருந்ததையும் அவரது சிறுநீரில் போதைப் பொருள் அறிகுறி தென்பட்ட தையும் அதிகாரிகள் கண்டனர். அந்தப் போதைப் பொருளை தாம் வெளிநாட்டில் உட் கொண்டதாக டெனஷார் தெரிவித்தார். தனது குற்றங்கள் தொடர்பில் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிந்திருந்தும் டெனஷார் சிங்கப்பூரை விட்டு வெளியேறினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.