வழக்கறிஞர் என பொய்யுரைத்து இரு பெண்களை ஏமாற்றியவருக்கு சிறை

தாம் ஒரு வழக்கறிஞர் என பொய்யுரைத்து இரு பெண்க ளிடமிருந்து $23,000க்கு மேற்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்ட ஆடவர் ஒருவருக்கு நேற்று 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அண்டோனியோ அரோமின் வோங் என்ற அந்த 67 வயது ஆடவர் $11,700ஐ ஏமாற்றி பெற்றுக்கொண்ட ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எஞ்சியுள்ள தொகை யுடன் தொடர்பு கொண்ட மேலும் 12 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டது. 
வோங், 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை ஏமாற்று தல் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக சிறைக்குச் சென்று வந்தவர் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
2016 ஏப்ரல் மாதத்தில் தமது நண்பர் மூலம் 48 வயது திருவாட்டி ஆட்ரி பாங் சொக் கியானுக்கு அவரது காலஞ்சென்ற கணவரின் சொத்து தொடர்பான சட்டப் பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டு, அவரை அணுகிய வோங் தாம் வழக்கறிஞர் என்று பொய் சொல்லி, அவரது சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறினார். 
அதன் தொடர்பில் அதே ஆண்டு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை தமது வழக்கறிஞர் கட்டணமாக திருவாட்டி பாங்கிடமிருந்து வோங் $10,200 பெற்றார். அந்தப் பணத்தைத் தனது விடுமுறைச் செலவுகளுக்கும் கடன் செலுத்துவதற்கும் வோங் பயன்படுத்தினார். 2016 செப்டம்பரில் திருவாட்டி பாங், வோங் பற்றி போலிசில் புகார் கொடுத்த மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார். 
பிணையில் விடுவிக்கப்பட்ட வோங், பிணையை மீறி தலைமறைவாக இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு 56 வயது திருவாட்டி சோங் லி சியாவிடம், வழக்கறிஞர் என பொய் சொல்லி அவரது வழக்குக்கு உதவி செய்வதாகக் கூறி வோங் $1,500 பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவாட்டி சோங் போலிசில் புகார் கொடுத்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon