சுடச் சுடச் செய்திகள்

பணிப்பெண்களை பொருட்கள்போல விளம்பரம் செய்த நிறுவனம் குற்றங்களை ஒப்புக்கொண்டது

தங்கள் பணிப்பெண்களை இணை யத்தில் பொருட்களை விற்பனை செய்வதுபோல விளம்பரப்படுத்திய ஒரு நிறுவனம், வேலைவாய்ப்பு முகவை உரிமம் விதிமுறைகளை மீறியதற்கு தண்டிக்கப்படவிருக் கும் முதல் நிறுவனமாகத் திகழ் கிறது.
‘எஸ்ஆர்சி ரிக்குருட்மண்ட்’ எனும் அந்நிறுவனம் தன் மீது சுமத்தப்பட்ட 45 குற்றச்சாட்டுகளை யும் ஒப்புக்கொண்டுள்ளது. அதில் வெளிநாட்டு பணிப்பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையில் விளம்படுத்திய குற்ற மும் அடங்கும். அந்நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட மேலும் 99 குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் எடுத் துக்கொள்ளப்பட்டன.
‘எஸ்ஆர்சி’ நிறுவன ஊழியர் களில் ஒருவருக்கு கடந்த நவம்பர் மாதம் $20,000 அபராதம் விதிக் கப்பட்டது. உணர்வுகளுக்கு மதிப் பளிக்காத வகையில் பணிப்பெண் கள் பற்றிய விவரங்களைப் புகைப் படங்களுடன் கரோசல் இணையத் தளத்தில் அவர் பதிவேற்றம் செய் தார். அது பணிப்பெண்களைப் பொருட்களைப் போல காட்டியது என்றும் குறிப்பிட்ட பணிப்பெண் ஒருவர் வேலைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டிருந்தால், அவர் புகைப்படத் துக்குக் கீழ் ‘விற்கப்பட்டு விட் டது’ என்று குறிக்கப்பட்டிருக்கும் என்றும் விவரிக்கப்பட்டது.  
“வேலைவாய்ப்பு முகவை விதி முறைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு முகவைகள் செயல்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு அவற் றுக்கு அடிக்கடி நினைவூட்டி வரு கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon