ஆய்வு: சிங்கப்பூரில் பெண்கள் ஆண்களைவிட 13 விழுக்காடு குறைவாக சம்பாதிக்கின்றனர்

ஆய்வு: சிங்கப்பூரில் பெண்கள் ஆண்களைவிட 13 விழுக்காடு குறைவாக சம்பாதிக்கின்றனர்

1 mins read
4ea90257-84ab-4f17-ba1d-24b62bc33246
-

சிங்கப்பூரில் பெண்கள், ஆண்களைவிட 13 விழுக்காடு குறைவாக சம்பாதிப்பதாக வேலை வாய்ப்புகளுக்கான 'கிளாஸ்டோர்' இணையத்தளம் நடத்திய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாரபட்சம் இதற்குப் பங்களித்திருக்கலாம் என்ற அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளியில் சுமார் 60 விழுக்காடு விளக்கக்கூடியது. 45 விழுக்காட்டுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வி மற்றும் வேலை அனுபவ வேறுபாடுகள் காரணம். ஆண்களும் பெண்களும் வெவ்வேறு துறைகளிலும் வேலைகளிலும் சேர்வது எஞ்சியுள்ள 16 விழுக்காட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான பாரபட்சம் உள்ளிட்ட சில அம்சங்கள் விளக்கப்படமுடியாத இடைவெளிக்குக் காரணங்களாக இருக்கலாம் என்று 'கிளாஸ்டோர்' அறிக்கை கூறுகிறது.5000 சிங்கப்பூர் ஊழியர்களின் ஊதியங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவர்களில் பெண்களின் சராசரி வருடாந்திர வருமானம் ஆண்களைவிட சுமார் 13,530 வெள்ளி குறைவாக உள்ளது.

சிங்கப்பூரின் ஊழியர் அணியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டில் 48 விழுக்காடாக இருந்த பெண்களின் பங்களிப்பு 2018ஆம் ஆண்டில் 60 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.