உயர்தர புரதச் சத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் சத்துள்ள கொழுப்பைக் கொண்ட மீன்களை விஞ்ஞானிகள் இங்கு வளர்க்கின்றனர். இந்த மீன்கள் அதிவேகமாக வளரக்கூடியவை.
"பிரிமியம் டிலாபா" என்ற அந்த மீன்கள், ஒமெகா-3 சத்தைக் கொண்டுள்ளவை. தெமாசிக் உயிர் அறிவியல் ஆய்வகத்தில் தற்போது வளர்க்கப்படுகின்றன. இதுபோன்ற மீன் வளர்ப்பு முறை, சுயமாக உணவு தயாரிக்க முயலும் சிங்கப்பூருக்குக் கைகொடுக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கடந்தாண்டு சிங்கப்பூரில் சாப்பிடப்பட்ட மீன்களில் 9 விழுக்காடு மட்டுமே உள்ளூரிலேயே வளர்க்கப்பட்டது. இந்த வகை புதிய மீன்களைத் வளர்ப்பதற்காக ஆய்வகம் வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையத்திடம் தெரிவித்தது.

