உணவு, மருந்து, மின்னிலக்க தொழில்நுட்ப ஆய்வு ஆகியவற்றில் சிங்கப்பூர் 700 மில்லியன் வெள்ளி முதலீடு

உணவு, மருந்து, மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு 700 மில்லியன் வெள்ளிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்காகவும் இணையப் பாதுகாப்பு தேவைகளுக்காகவும் 500 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்றும் திரு ஹெங் கூறினார். இந்த புதிய முடிவு, ‘ஆர்ஐஇ’ எனப்படும் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்திற்கான 2020 திட்டத்தில் அங்கம் வகிக்கும்.

சிங்கப்பூரின் கணினி ஆற்றல்களையும் இயந்திரவியல், தானியக்கத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியையும் இந்தத் தொகை மேம்படுத்தும். உயிரணு சிகிச்சைக்கான உற்பத்தித் திறன்களை மேம்படுத்த 80 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும். இது மருத்துவத்தின் எதிர்காலமாக கருதப்படுகிறது.

நகர்ப்புற பண்ணைகள், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மாமிச உள்ளிட்ட உணவு ஆய்வுகளுக்கு 144 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்.

‘ஆர்ஐஇ’2020 திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 19 பில்லியன் வெள்ளி தொகையில் மேற்கண்ட தொகைகள் இடம்பெறுகின்றன.

இது குறித்த விரிவான செய்திகள், வியாழக்கிழமை (மார்ச் 27) வெளிவரும் தமிழ் முரசு இதழில்! 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon