சுடச் சுடச் செய்திகள்

டாக்டர் மகாதீரை பிரதமர் லீ அடுத்த மாதம் சந்திக்கிறார்

பிரதமர் லீ சியன் லூங் அடுத்த மாதம் மலேசியாவின் புத்ராஜெயா வில் அந்நாட்டு பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுவைச் சந்திக்க உள்ளார்.
9வது சிங்கப்பூர்-மலேசிய தலைவர்கள் ஓய்வுத்தள சந்திப்பு என்னும் வருடாந்திர நிகழ்வின் போது இருவரும் சந்திக்கவிருப் பதாக தகவல் வெளியாகியுள் ளது.
இருதரப்பு விவகாரங்களைக் கலந்து பேசவும் ஒத்துழைப்பை வலுவாக்கவும் இந்தச் சந்திப்பு முக்கியதொரு அம்சமாக விளங் குகிறது.
கடந்த நவம்பர் மாதம் நிகழ விருந்த இச்சந்திப்பு ஒத்திப் போடப்பட்டது. 
இதனை அடுத்த (ஏப்ரல்) மாதம் 8ஆம் தேதியும் 9ஆம் தேதியும் நடத்த மலேசியா பரிந் துரைத்ததாகவும் அதனை சிங் கப்பூர் ஏற்றுக் கொண்டதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
திட்டமிடப்பட்டுள்ளதைப்போல் அடுத்த மாதம் இரு தலைவர்களும் சந்தித்தால் மலேசியாவில் பக்கத் தான் ஹரப்பான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நடை பெறும் முதல் ஓய்வுத்தள சந்திப் பாக அது அமையும். 
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon