சுடச் சுடச் செய்திகள்

வாழ்வதற்கும் ஏற்ற துடிப்பான பகுதியாக உருமாறுகிறது சிபிடி

சிபிடி எனப்படும் மத்திய வர்த்தக வட்டாரத்தை இரவு நேரத்திலும் ஆள்நடமாட்டம் கொண்ட பகுதி யாக மாற்றும் வகையில் அதிகமான வீடுகள் கட்டப்பட உள்ளன. அந்த வட்டாரத்தில் பழைய அலுவலகக் கட்டடங்களை வீடுகளாகவும் ஹோட்டல்களாகவும் மாற்ற ஊக்கு விக்கும் நோக்கில் மேம்பாட்டாளர் களுக்கு அரசாங்கம் சலுகை வழங் கும். பெருந்திட்ட வரைவின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் மத்திய வர்த்தக வட்டார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித் தார். 
தற்போது ஒரேமாதிரியான பயன்பாட்டில் உள்ள இந்த வட்டாரத் தில் பல்வேறு பயன்பாடுகள் அறி முகம் செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறு செய்வதன் மூலம்தான் சிபிடி என் பது வேலை செய்வதற்கான பகுதி யாக மட்டுமல்லாது வசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் உகந்த துடிப் பான இடமாக உருவாகும் என்றார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் பெருந்திட்டம் அங்கீகாரம் பெற்ற தும் இந்த சிபிடி ஊக்குவிப்புத் திட்டம் தொடக்கம் காணும். ஆன் சன் ரோடு, செசில் ஸ்திரீட், ஷென்டன் வே, ராபின்சன் ரோடு, தஞ்சோங் பகார் ஆகிய வட்டாரங் களில் இத்திட்டம் செயல்படுத்தப் படும்.குறைந்தபட்சம் 20 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட, பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட பெரும் பாலான அலுவலகக் கட்டடங்கள் இத்திட்டத்திற்குத் தகுதிபெறும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon