அறிவியல், தொழில்நுட்பத்தில் இளையரின் ஈடுபாடு அவசியம்

அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின்பால் இளையர்களை ஈர்க்கும் செயலை சிங்கப்பூர் தொடர வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள் ளார். அறிவியல் தழுவிய, அத னையே நோக்கமாகக் கொண்ட மனப்போக்கை அவர்களிடத்தில் விதைப்பதும் முக்கியம் என்றார் அவர்.
அறிவியல், ஆய்வுத் துறை களின் பலன்களை சிங்கப்பூரர் கள் பெற்றுத் திகழ இந்த சமூகச் சூழல் அவசியமானது என்று நேற்று நிகழ்ந்த 11வது ஆராய்ச்சி, புத்தாக்க, ஊக்க மன்றக் கூட் டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் தனது ஆராய்ச்சி முனைப்புகளில் வெற்றி பெறுவது என்பது மூன்று காரணிகளைச் சார்ந்துள்ளது. 
“சமூகத்தினிடையே அறி வியல், தொழில்நுட்பத்தை வலி யுறுத்துதல், திறன்பெற்ற ஆராய்ச் சியாளர்களையும் தொழில்முனை வர்களையும் கொண்ட வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துதல், வெளிநாடுகளுடனும் அவற்றின் ஆய்வு நிறுவனங்களுடனும் அனைத்துலக ரீதியிலான பங் காளித்துவத்தை உருவாக்குதல் ஆகியன அந்த மூன்று முக்கிய காரணிகள்,” என்று திரு லீ விளக்கினார். 
 

ஆராய்ச்சி முனைப்புகளில் சிங்கப்பூர் வெற்றிபெறுவதற்கான காரணிகளை பிரதமர் லீ விளக்கினார். அவருடன் (இடது) நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், துணைப்பிரதமர் டியோ சீ ஹியன் (வலது) . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon