முன்னாள் காதலியை தன்னுடன் உறவுகொள்ளுமாறு கத்தி முனையில் மிரட்டிய 31 வயது ஆடவருக்கு நான்கு மாதம், மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சுயதொழில் செய்துவரும் அந்த ஆடவரும் அந்தப் பெண் ணும் நான்காண்டுகளுக்கும் மேலாக பழகி வந்ததாகவும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இருவரும் பிரிந்த தாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. அதற்கு ஆறு நாட்களுக்குப் பிறகு தன்னிடமிருந்த மாற்று சாவி மூலம் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த அந்த ஆடவர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய அந்தப் பெண்ணை அறைந்த துடன் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றார். மின்தூக்கி வழியாக தரைத் தளத்தை அடைந்த பிறகு அந்தப் பெண்ணைக் கீழே தள்ளியதால் அம்மாதுவின் இரு முழங்கால் களிலும் காயம் ஏற்பட்டது. கத்தியைக் காட்டி மிரட்டி யதால் அந்த ஆடவரின் கட்டளைக்கேற்ப தமது காரில் ஏறினார் 25 வயதான அந்தப் பெண். சில மருந்துகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய பிறகு தம்முடன் உறவுகொள்ள ஆடவர் அழைத்ததாகவும் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் கத்தி முனையில் அந்த ஆடவர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண் ணின் ஆடைகளைக் களைந்து, உள்ளாடைகளுடன் அவரை காணொளி எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் காணொளியை பெண் ணின் தந்தைக்கு அனுப்பிவிடப் போவதாக மிரட்டி தம்முடன் பேச அந்தப் பெண்ணை வற்புறுத்திய ஆடவர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதற்காக ஈராண்டு கள் சிறைத் தண்டனை, $5,000 அபராதம் விதிக்கப்பட்டிருக் கலாம். பெண்ணை மானபங்கப் படுத்தியதற்காக அந்த ஆடவருக்கு ஓராண்டு வரை சிறை, அபராதம் விதிக்கப்பட்டு இருக்கலாம்.
கத்திமுனையில் முன்னாள் காதலியை மிரட்டியவருக்கு சிறை
2 mins read

