கர்ப்பிணியாக இருந்த காதலியை அடித்தவருக்கு 10 வார சிறை

கர்ப்பிணியாக இருந்த காதலியை அடித்தவருக்கு 10 வார சிறை

1 mins read
350c49ba-20ce-4827-9866-a457f4b7a5d9
முகமது முஸ்தஃபா அலிக்கு 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது -

நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த காதலியுடனான சண்டையில் அவரை படுக்கையிலிருந்து இழுத்தது, கன்னத்தில் அறைந்தது, தொடையில் இருமுறை உதைத்தது ஆகிய குற்றச் செயல்களைப் புரிந்த 24 வயது முகமது முஸ்தஃபா அலிக்கு 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயது ஷஹிகா நடியா முகம்மது ஹெர்மன் எனும் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலர் தொடர்பான இந்தச் சண்டை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி நிகழ்ந்தது. ஆயினும் ஷஹிகா ஆரோக்கியமான ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். சென்ற ஆண்டு ஷஹிகாவுக்கும் முஸ்தஃபா அலிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்துக்குத் தொடர்பில்லாத வேறொரு சாலை வன்முறை குற்றத்திற்காகவும் முகமது முஸ்தஃபா அலிக்கு அந்த 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் சாலையில் ஒரு காரோட்டி மெதுவாகத் தமது காரை ஓட்டியதற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரை மரக்கட்டை ஒன்றால் அடித்துக் காயப்படுத்தியுள்ளார் முகமது முஸ்தஃபா.